வழமைக்கு திரும்பியது முகநூல் சேவைகள்







 Meta  சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் திடீரென  செயலிழந்தன.

குறித்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வந்தது. 

பேஸ்புக் செயலிக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போது, வட்ஸ்புக் செயலிக்கு OTP அனுப்பப்படுவதாக குறுந்தகவல் வருகின்ற போதிலும், OTP குறுந்தகவல்  வட்ஸ்புக்  கணக்குகளிற்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது முகநூல் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது. இதனால் முகநூல் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் குறித்த முடக்கத்திற்கான காரணம் Meta நிறுவனத்திடம் இருந்து இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial