ரஜினி, கமல் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி என்று சொன்னாலும் உண்மையில் அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஒரு சில விஷயங்கள் இவர்களுடைய போட்டியை அப்பட்டமாக காட்டிவிடுகிறது.
அப்படித்தான் தற்போது கமல் நடிகர் சங்கத்திற்காக நிதி உதவி செய்து சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்திருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் பொருளாதார நிதி காரணமாக தடைப்பட்டு நிற்கிறது. கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் இருந்தால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்ற நிலை உள்ளது.
அதை அடுத்து உதயநிதி ஒரு கோடி ரூபாயை வைப்பு நிதியாக கொடுத்தார். அதற்கு அடுத்தபடியாக தற்போது ஆண்டவரும் தன் சார்பாக ஒரு கோடி ரூபாயை கைநிறைய அள்ளி கொடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகரன் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதி உதவி செய்திருந்தனர்.
அதை எடுத்து மீண்டும் கார்த்தி ஒரு கோடியும் விஷால் 25 லட்சமும் கொடுத்திருந்தனர். இப்படி நடிகர் சங்க கட்டிடம் முடிவு பெறுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். அதில் ஆண்டவர் தற்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருப்பது வைரலாகி வருகிறது.
மேலும் சூப்பர் ஸ்டார் என் இன்னும் மௌனம் காக்கிறார்? அவர் தரப்பில் இருந்து என்ன தரப் போகிறார்? என்ற ஆவலும் எழுந்துள்ளது. ஆனால் அவருக்கு முன்பாகவே கமல் முந்திக்கொண்டு பெயரை தட்டி சென்று விட்டார். இதன் மூலம் அவர் சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டி விட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் சங்க கட்டிடம் முடிவடைந்து விட்டால் திருமணம் செய்வேன் என்று விஷால் கூறியிருந்தார். தற்போது வேலைகள் அடுத்தடுத்து நடக்கும் பட்சத்தில் விரைவில் அவரை மாப்பிள்ளை கோலத்தில் பார்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment