அவசர மருந்து வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி அதனை கொள்வனவு நடைமுறையின் ஊடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் தரம் தொடர்பான முழுப் பொறுப்பும் மருந்து மேற்பார்வையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர்,
புற்றுநோயாளிகளுக்கான தரமற்ற மருந்துகளை கொண்டு வருவது குறித்து விசேட குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சினால் விநியோகிக்கப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை எனவும்,
அவ்வாறான மருந்துகள் தரம் குறைந்ததாக இருக்க வாய்ப்பில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார்.
Post a Comment