அமெரிக்க தொழிலதிபர் கிரிப்டோ கிங்குக்கு சிறைத்தண்டனை

 









அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் சாம் பேங்க்மேன் ஃப்ரைடுக்கு(Sam Bankman-Fried )25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் நியூயார்க் நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'கிரிப்டோ கரன்சி' டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் மூலம் தனது வாடிக்கையாளர்களிடம் 8 பில்லியன் டொலர் மோசடி செய்ததாக சாம் பேங்க்மேன் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.

நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சாம் பேங்க்மேன் 2022 இல் கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில், அவரது 32 பில்லியன் டொலர் சொத்துமதிப்பும் திவாலானது.

இவரது 'எஃப்டிஎக்ஸ்' நிறுவனம் கிரிப்டோகரன்சிகளை மட்டுமின்றி பிட்காயினையும் தங்கள் நிதியின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்தது.

அந்த நடவடிக்கைகளின் போர்வையில் நிதி மோசடி மற்றும் பண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் சாம் பேங்க்மேன் மிகப்பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டவராகவும் கருதப்படுகிறார்.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial