சிரியாவில் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 38 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் போது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 5 பேர் உள்பட 38 பேர் பலியானாதோடு ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறும் போது, அலெப்போ மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என கூறியுள்ளார்.
இஸ்ரேல் அடுத்தடுத்து சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஈரானில் புரட்சிகர காவல்படை மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதன் ஆதரவு இயக்கங்களும் சிரியா முழுவதும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment