அஜித்திற்கு நிஜமாகவே மூளை ஆபரேஷன் நடந்ததா?- அவரது BRO தகவல்
நடிகர் அஜித் குறித்து கடந்த 2 நாட்களாகவே மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் தெரிந்துகொண்ட ரசிகர்கள் அஜித்திற்கு என்ன ஆனது, ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வருத்தமாக பதிவுகள் போட்டு வந்தனர்.
அதோடு அவருக்கு மூளையில் கட்டி உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது.
தற்போது மருத்துவமனையில் அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் கூறிய அவர், வழக்கமான பரிசோதனை
மேற்கொண்டபோது அவருக்கு காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதற்கான சிகிச்சை அரை மணிநேரம் நடந்ததாகவும் கூறினார்.
அந்த சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவே அஜித் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், இன்று இரவு அல்லது நாளை காலை அஜித் வீடு திரும்புவார் என்றும் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்