இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றதுடன், ஜூன் மாதம் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பரில் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment