காஸா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஹமாஸ் போராளிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் சாதகமாக பதிலளிக்கவில்லை மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 14 உறுப்பு நாடுகள் வாக்களித்தன.
பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய அமெரிக்கா, நேற்று வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment