தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் உள்பட பலர் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அங்கு பாரிய அலை எழும்பியதால் கடற்றொழில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய கடலோரபொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களை மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் போது மயங்கிய நிலையில் இருந்த குறித்த கடற்றொழிலாளர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 5 கடற்றொழிலாளர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு 6 உஉலங்கு வானூர்தி மற்றும் 12 ரோந்து படகுகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment