கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டடுள்ளதுடன், குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பயங்கரமான வன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Download
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment