காஸாவிற்கு பஞ்சம் ஏற்படாமல் தடுக்க தடையில்லா உதவிகளை வழங்க வேண்டும் - ஐநாவின் உச்ச நீதிமன்றம்!

 




காஸாவிற்கு பஞ்சம் ஏற்படாமல் தடுக்க தடையில்லா உதவிகளை வழங்க வேண்டும் என்று ஐநாவின் உச்ச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் ஒருமனதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

“தாமதமின்றி” அத்தியாவசிய அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காஸா வாசிகள் பெறுவதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு விடப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்குள் காஸா பகுதியில் பஞ்சம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் காஸாவிற்கு உதவிகள் செல்வதைத் தடுக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial