பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சொந்தமான சிறிய படகின் மீது சீன போர்க்கப்பல்கள் தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது தாக்குதலுக்குள்ளான படகு பலத்த சேதம் அடைந்துள்ளதோடு, சீனாவின் இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்ற நிலையிலே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோரிவருவதோடு, குறிப்பாக சர்ச்சைக்குரிய பகுதியான இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதி பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment