சிம்பு தற்போது தனது 48வது படத்திற்காக ரெடியாகி வருகிறார். தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனிடையே சிம்பு - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொன்ன தகவல் கோலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், தற்போது விடுதலை 2ம் பாகம் இயக்கி வருகிறார். சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். சூர்யா, அமீர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய்யின் தளபதி 69 படத்தையும் வெற்றிமாறன் தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்டேட் கொடுத்துள்ளார். சிம்புவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 2021 நவம்பரில் வெளியானது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment