பல மணிநேரம் பேச்சு.. விஜய்யை அரசியலுக்கு அழைத்ததே நான்தான்.. கமல் ஹாசன்

 






தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.


விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. 


இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டது.


இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial