பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில உணவகங்கள், ஆடையங்கள் செயல்பட்டு வந்துள்ளன..
35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை உயிருடன் மீட்ட நிலையில், அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment