காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் இது ஆகும்.
இந்த கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்க உள்ள சுற்றுலா அதி சொகுசு கப்பல் ஆகும். இதனை தயாரித்து பரீட்சார்த்த பயணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து 19.02.2024 அன்றைய தினம் வெற்றிகரமாக முடிந்தது.
சூரிய மின் சக்தி வசதியை கொண்ட சொகுசு கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் கரைநகரில் இவ்வாறான ஓர் தொழில்சாலை உண்டு என்பதும் பெருமை ஆகும்.
கடலை ஆண்ட தமிழர்கள் நாம். கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமையும், கடல் கடந்து "கடாரம் வென்ற தமிழன்.." என்றெல்லாம் முன்னர் கூறுவோம்.
வங்க கடலை கட்டுப்படுத்தி கட்டுபாட்டில் வைத்திருந்த பொற்காலமும் உண்டு.
தற்போதும் தமிழர் ஒருவரின் முயற்சிகளில் உலகில் எங்கோ ஓர் இடத்தில் இவ்வாறான கப்பல்கள் தமிழரின் பெருமையை கூறட்டும்.
Post a Comment