பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் நடிப்பை தான் விரும்புவார்கள். ஆனால் சூப்பர் ஸ்டாரின் வாரிசுகளான இரு மகள்களும் படம் இயக்குவதில் தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதில் ரஜினியும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் படத்தை ரொம்பவே எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அக்காவுக்கு போட்டியாக சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே இவர் கோச்சடையான், விஐபி 2 ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். அதை அடுத்து ஆறு வருடங்களுக்குப் பிறகு சௌந்தர்யா தற்போது லாரன்ஸை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார்.
ஏ ஆர் ரகுமான் அல்லது ஜிவி பிரகாஷ் இருவரில் ஒருவர் இசையமைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது சௌந்தர்யா அமேசான் ப்ரைம் தளத்துடன் இணைந்து ஒரு வெப் தொடரை தயாரித்து வருகிறார். அசோக் செல்வன் முக்கிய கேரக்டரில் அதில் நடிக்கிறார்.
கேங்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை நோவா ஆபிரகாம் இயக்கி வருகிறார். இந்நிலையில் சௌந்தர்யா படம் இயக்கவும் தயாராகி இருக்கிறார். இப்படியாக பிரம்மாண்ட கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment