இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் காரஞ்( INS Karanj) நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது இன்று(03.02.2024) கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் காரஞ் நீர்மூழ்கி கப்பலானது தளபதி அருணாப் தலைமையில் 53 பேருடன் வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, இலங்கை கடற்படையினர் இந்திய படையினருடன் நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment