ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படத்திலேயே மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை நடிக்க வைத்து வெற்றியும் பெற்றார்.
அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. ரன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான ஜி படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சக்கை போடு போட்ட சண்டக்கோழி: 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை ஆடியது. ரன் படத்திற்கு பிறகு லிங்குசாமிக்கு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படமாக சண்டக்கோழி மாறியது. நடிகர் விஷாலுக்கும் அந்த படம் பெரிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்ததாக மகாபாரதக் கதையை மையப்படுத்தி பிரம்மாண்டமாக ஒரு இதிகாச படத்தை பான் இந்தியா படமாக லிங்குசாமி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை வைத்து ஏகப்பட்ட படங்கள் இந்திய சினிமாவில் உருவாகி வருகின்றன.
இந்த ஆண்டு சங்கராந்தி தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. தொடர்ந்து பல இயக்குநர்களும் இதிகாச படங்களையும் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளையும் படமாக்க முடிவு செய்திருக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனங்கள் தயார்: வட இந்தியாவில் அதுபோன்ற படங்கள் வேறலெவலில் வசூலை ஈட்டி வரும் நிலையில், பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாக அது போன்ற படங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறுகின்றனர்.
ராமாயண கதையை வைத்து ரன்பீர் கபூர் ஒரு படம் நடிக்க உள்ளார். கர்ணன் கதையை வைத்து சூர்யா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், லிங்குசாமி மகாபாரதக் கதையை இயக்கப் போகிறாராம். விரைவில், அந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment