யாழில் தாலிக்கொடி அறுத்த புத்தளப் பெண்கள் கைது.
யாழ் கலட்டி அம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த புத்தளப் பெண்கள் இருவரை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
அறுக்கப்பட்ட தாலிக் கொடி மற்றும் சங்கிலி யூஸ் போத்தலில் மறைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்டனர்.
குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Post a Comment