சுவிஸில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்றிரவு நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் பயணிகளுடன் ரயிலை கடத்திய நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். அத்துடன் பணயக்கைதிகளையும் மீட்டுள்ளனர்.
சுவிஸில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்றிரவு நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார்.
குறித்த மர்ம நபர் பயணிகள் மற்றும் நடத்துனரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் நடத்துனர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ரயிலில் அதிரடியாக நுழைந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த நபர் கோடாரியால் பொலிஸாரை தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் பொலிஸார் அந்த கடத்தல்காரனை சுட்டுக் கொன்றனர்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment