இலங்கையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட “இமாலய பிரகடனத்திற்கு” தாம் நிதியுதவி செய்ததாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து சோஷலிஸ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொலினா ஃபேபியன் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை (பெப்ரவரி 21) பதிலளிக்கும் போதே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு இதை தெரிவித்துள்ளது.
“இமாலய பிரகடனத்திற்கு” சுவிஸ் அரசு எந்தளவிற்கு ஆதரவு வழங்கியது என அவர் நாடாளுமன்றில் எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
அதற்கு அளித்த பதிலிளித்த அரசு, “சுவிஸ் வெளிவிவகார அமைச்சு “போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு” புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தளம் ஒன்றை நிறுவ நிதியுதவி அளித்தது.
அதையடுத்தே அந்த “இமாலய பிரகடனம்” வெளியானது. எனினும், அந்த கலந்துரையாடல்களுக்கு பங்குதாரர் அமைப்பே பொறுப்பாக இருந்தது” என விளக்கமளித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஏன் இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழரும் உள்வாங்கப்படவில்லை என அவர் எழுப்பிய கேள்விக்கும் மேற்கூறிய பதிலலே அளிக்கப்பட்டுள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment