மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி யாழ்ப்பாணம் என தென்னிந்திய பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
NORTHERN UNI தனியார் பல்லைக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி யாழ்ப்பாணம். உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தியது.
நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் ஒன்றாக, இணைந்து கொண்டாடினோம். இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்தவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒவ்வொரு நொடிக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment