ரஜினி நடிச்ச ஒரு படம் வெளியுலகத்துக்கு தெரியாமலே போனா அது அதிசயம் தானே.




ரஜினி நடிச்ச ஒரு படம் வெளியுலகத்துக்கு தெரியாமலே போனா அது அதிசயம் தானே...

ரஜினி பிலிம் இன்ஸ்ட்டிடியூட்ல படிக்கும் போது அசோக், ரகுநந்தன், ஹேமா சௌத்ரி மாதிரி பலர் கர்நாடகாவிலிருந்து வந்து படிச்சாங்க. அதில் ஒருத்தர் தான் ரவீந்திரநாத். ரவீந்திரநாத்தை நமக்கு தெரியலைன்னாலும் அவரை நமக்கு தெரியும். சந்தனக்கடத்தல் வீரப்பனை வைத்து முதன்முதலில் 1991ல் கன்னடத்தில் 'வீரப்பன்'னு ஒரு படத்தை எடுத்தார். தேவராஜ் தான் அதில் வீரப்பனாக நடித்தார். அப்போ காட்டுக்குள்ள ராஜாவா வீரப்பன் உச்சத்திலிருந்த ஒரு நேரம்.

அந்தப்படத்தை இயக்கியவர் தான் ரவீந்திரநாத். ரவீந்திரநாத் ரஜினியோட நல்ல நண்பர். சிவராஜ்குமார், ஸ்ருதியை வச்சு 'நம்மூர ஹுடுகா' படத்தை எடுத்தவர் ரவீந்திரநாத். 

ரவீந்திரநாத் ஒரு பேச்சிலர். ஒரு சகோதரி பெங்களூருவிலும், ஒரு சகோதரர் மும்பையிலும் இருக்கிறார்கள். ஆனா அவங்க கூட ரவீந்திரநாத் டச் கிடையாது. 2014ல அவர் ஒரு தெலுங்கு படத்துக்கு அட்வைசராக இருக்கிறார். சினிமா பற்றிய பேச்சு வார்த்தைகள் முடித்து சக நண்பரோடு ரயிலேற வருகிறார். ரயில் ஏறும்போது அங்கேயே குழைஞ்சு விழுந்திடுறார். அவர் நண்பர் கத்தி கூப்பாடு போட்டும் ஒரு டாக்டர் கூட அப்போ இல்லை. ஆம்புலன்ஸ்சுக்கு போன் போட்டு அது லேட்டா வருது. ஏழே முக்காலுக்கு விழுந்தவரை எடுக்க பத்து மணிக்கு தான் ஆம்புலன்ஸ் வருது. ஆஸ்பத்திரிக்கு போன பிறகு தான் அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து ரொம்ப நேரம் ஆனது தெரிகிறது.






அவரை பெங்களூரு கொண்டு வரவேண்டும். செய்தி ரஜினிக்கு போகிறது. அவர் பல இடங்களுக்கு போன் செய்து உடல் நல்லபடியாக பெங்களூர் வந்து சேர எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். உடல் வந்ததும் அவர் சகோதரர் அவரை அடக்கமோ, எரியூட்டவோ செய்யவில்லை. அதை பெங்களூரு எம்.எஸ்.ராமையா ஹாஸ்பிடலுக்கு தானமாக ஆராய்ச்சிக்காக கொடுத்து விடுகிறார். 

ரவீந்திரநாத் கன்னட சினிமாவில் அசோசியேட்டாக பணிபுரிகிறார். 1984ல் அவருக்கு சினிமா இயக்க வாய்ப்பு வருகிறது. தமிழ் நடிகர் ராஜீவ், ஏவிஎம்.ராஜன்-புஷ்பலதா மகள் மகாலட்சுமி, ஜெயசித்ரா நடிக்க 'அபரஞ்சி' என்கிற படத்தை இயக்குகிறார். முதன் முதலில் படத்தை இயக்குவதால் தன்னோடு படித்த அசோக், ரஜினி எல்லோரிடம் நடிக்க அழைப்பு விடுக்கிறார்

.




ரவீந்திரநாத் அழைத்த அந்தகாலகட்டத்தில் ரஜினி பிஸியான நடிகர். அப்போ அவர் பாலிவுட்டிலும் நுழைதிருந்தார். ஆனா நண்பனுக்காக நடிக்க ஓகே சொன்ன அவர் "எத்தனை நாள் கால்ஷீட் வேணும்?"னு கேட்கிறார். இரண்டு நாள் போதும்னு சொல்ல ரஜினி சம்மதிக்கிறார்.

சென்னையிலிருந்து காரில் ஷிமோகா போய் நடித்துக்கொடுத்த ரஜினிக்கு சம்பளம் எவ்வளவு கொடுப்பது என தயாரிப்பாளர் டென்ஷனாகிறார். "இரண்டு சிகரெட் பாக்கெட் வாங்கி கொடுங்க போதும்" என ரஜினி சொல்ல குழு சந்தோஷப்படுகிறது. 

அப்படி நண்பரின் படத்தில் ரஜினி நடித்தது ஒரு நீதிபதி வேடம். படத்தின் பெயர் "அபரஞ்சி". ரவீந்திரநாத்தின் முதல் படம் அபரஞ்சி 1984ல்  வெளியானது.

ஆனால் இந்தப்படத்தின் ஒரு போட்டோ கூட கிடைக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்....வாழும் போது நான் நல்லா இருக்கேன் என்னால் நீங்களும் நல்லா இருங்கன்னு பெத்தவங்களே நினைக்காத இந்த காலத்தில் தன் கூட படித்தார் என்பதற்காக வாழ்ந்த போதும் உதவியும், இறந்த பிறகும் உதவுவது என்பது பெரிய விஷயம். 



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akstamilmedia.com


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial