கேப்டன் இறப்பில் ரஜினி, கமலுக்கு இருந்த பொறுப்பு..


 கேப்டன் மறைவின் தாக்கத்திலிருந்து இன்னும் யாரும் வெளிவரவில்லை. இப்போது சோஷியல் மீடியாவில் பலரும் அவர் குறித்த நினைவுகளை தான் பகிர்ந்து வருகின்றனர். அதில் கேப்டனின் இறப்பில் கலந்து கொள்ளாத பிரபலங்களை பற்றிய விமர்சனங்களும் அதிகமாக இருக்கிறது.

அதன்படி உள்ளூரில் இருந்து கொண்டே விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்கள் இறுதி சடங்கிற்கு வரவில்லை. அதேபோல் சிம்பு, அஜித் நினைத்திருந்தால் துபாயில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்களும் வரவில்லை.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் விஷால், சூர்யா உட்பட பல நடிகர்கள் வராததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கமல், ரஜினி இருவரும் நண்பனை காண உடனே ஓடோடி வந்து விட்டனர். அவர்களுக்கு இருக்கும் பொறுப்பு கூட நடிகர் சங்கத்திற்கு இல்லை.

ஏனென்றால் நடிகர் சங்க கட்டடம் உருவாவதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் தான். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் வந்த பணத்தில் நடிகர் சங்க இடத்தை மீட்ட பெருமை அவர் ஒருவரையே சேரும்.

அப்படிப்பட்ட மாமனிதனின் இறுதி சடங்கை அவர்கள் நினைத்திருந்தால் எடுத்து நடத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. தற்போது நடிகர் சங்க கட்டிடம் பாதிக்கும் மேல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கேப்டன் பெயரை தான் வைக்க வேண்டும் என தற்போது சினிமா ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அதுதான் அவருக்கான உண்மையான மரியாதையும் கூட. அதையும் நடிகர் சங்க நிர்வாகிகள் செய்ய தவறினால் நிச்சயம் அவர்கள் மீது இருக்கும் மதிப்பு குறைய கூடும். அந்த வகையில் கேப்டன் விஷயத்தில் நன்றியை மறந்த இவர்கள் இதையாவது எடுத்து செய்ய வேண்டும் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.






Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial