2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் 210,352 பேர் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 151,496 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
2022 ஆம் ஆண்டில், 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 106.6% ஆக வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Post a Comment