வெங்கட் பிரபு கடைசியாக எடுத்த இரண்டு படங்களான மாநாடு மற்றும் கஸ்டடி படம் ஏற்ற இறக்கத்துடன் வெற்றியே நிர்ணயித்திருக்கிறது.
அதனால் விஜய்யை வைத்து எடுத்து வரும் தளபதி 68 படம் எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் விஜய் நடித்தால் கண்டிப்பாக வசூல் அளவில் வெற்றி பெறுவது நிச்சயம் தான்.
இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் GOAT படப்பிடிப்பு மிக மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இவருடன் சேர்ந்து மீனாக்ஷி செளத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா மற்றும் பலர் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து, ஹைதராபாத், தற்போது சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் சென்னையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மொத்த பட குழுவும் ஸ்ரீலங்கா போகப் போகிறார்கள்.
அதற்காக வெங்கட் பிரபு அங்கே சென்று படப்பிடிப்புக்கான சூழ்நிலையை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவே கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறார். அதாவது இவரைப் பொருத்தவரை எப்போதுமே ஜாலியாக இருக்கணும் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.
ஆனால் எப்பொழுது விஜய்யுடன் சேர்ந்து தளபதி 68 படத்தில் கமிட் ஆகினாரோ, அப்பொழுதே ரொம்பவே டென்ஷன் ஆகவும் மற்றவர்களிடம் கண்டிப்பாகவும் நடந்து கொள்கிறாராம். அதுவும் சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கூட சிரிப்பே இவருடைய முகத்தில் பார்க்க முடியவில்லை. கோபத்தை நெருப்பு போல கக்கிக்கொண்டு கெட்ட வார்த்தையாலே ஒவ்வொருவரையும் திட்டிக் கொண்டு வருகிறாராம்.
முக்கியமாக உதவி இயக்குனர்களை கண்டமேனிக்கு கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு படப்பிடிப்பு தளத்தை ரணகளமாக மாற்றி விட்டாராம். இப்படி இவருடைய செய்கைக்கு பின்னாடி முழுக்க முழுக்க விஜய் தான் காரணம். எதற்காக என்றால் விஜய் ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படம் சீக்ரட்டாக இருக்க வேண்டும். சில முக்கியமான காட்சிகள் யாருக்கும் தெரியாத அளவிற்கு சஸ்பென்ஸாக இருக்கணும் என்று சொல்லி இருக்கிறாராம்.
ஆனால் இந்த விஷயங்கள் அனைத்தையும் வெங்கட் பிரபு கோட்டை விட்டதால் விஜய் கடுப்பாகி விட்டாராம். அதனால் தான் வெங்கட் பிரபு தற்போது இப்படி மாறிவிட்டார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment