சினிமாவில் இருக்கும் சில நட்சத்திரங்கள் ஓரளவுக்கு பிரபலமானதும் நடிப்பையும் தாண்டி மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்தி, எந்த அளவுக்கு செட்டில் ஆக முடியுமோ அதை கச்சிதமாக செய்து விடுவார்கள். அந்த வகையில் பலரும் பிசினஸ் பண்ணுவதற்கு அடி எடுத்து வைத்து விட்டார்கள். அப்படித்தான் சூர்யாவும் நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் களம் இறங்கி இருக்கிறார்.
அதாவது 10 ஓவர்களைக் கொண்ட போட்டிகளாக இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) தொடர் நடைபெறப் போகிறது. இந்த தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரானது வருகிற மார்ச் 2ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் உள்ள ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப்பச்சன், பெங்களூர் அணியை நடிகர் கிருத்திக் ரோஷன், ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமார், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம் சரண் வாங்கியுள்ளார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment