அரைச்ச மாவையே அரைக்காமல்’ தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி, பிரம்மாண்டமாக படம் எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவர் ஈ, பாகுபலி, ஆர்ஆர் ஆர் போன்ற படங்களின் மூலம் தன்னுடைய திறமையை உலகறிய செய்தவர். அதிலும் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை தட்டி தூக்கி இந்திய திரை உலகை பெருமைப்படுத்தியது.
இதை அடுத்து ராஜமௌலி இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இப்போது அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர் செல்போன் விளம்பர படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கினார். இப்போது பிரபாஸ், கமலஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தில் இயக்குனர் ராஜமௌலியும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக சயின்டிபிக் பிக்சனில் உருவாகிறது. சமீப காலமாகவே வரலாற்றுப் பின்னணியில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment