அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவிய, நியூராலிங்க் (Neuralink) நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியை செய்ய தொடங்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தின் முதல் முயற்சியான மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment