தாமரை கோபுரத்தை பார்வையிட வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் பாவனைக்காக தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, நேற்று மாத்திரம் தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பார்வையிட படையெடுக்கும் மக்கள்
அதில் உள்ளூரிலிருந்து 7,285 பார்வையாளர்களும், வெளிநாட்டிலிருந்து 237 பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.
இதற்கமைய, வெளிநாட்டில் இருந்து இதுவரையில் 42,297 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாகவும் தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.