கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் குறுகிய வடிவிலான போட்டிகளையே காண்பதற்கு இப்பொழுது பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதாரணமாக 60 ஓவர்களில் நடைபெற்ற போட்டி 50 ஓவர்களாக மாற்றப்பட்டது. இப்பொழுது இருபது ஓவர் போட்டிகளுக்கு அதிக அளவு ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்த வகை போட்டிகளுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் 5 நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வருங்கால சங்கதி தொடருமா என்பது பெரிய கேள்விக்குறி தான். ஒவ்வொரு நாடுகளும் டெஸ்ட் போட்டிகளை மேம்படுத்த பல மாறுதல்களை கொண்டு வருகிறது.
சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்த வகையில் டெஸ்ட் போட்டிகள் முதன்முதலாக பகல் இரவு போட்டிகளாகவும் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி வெள்ளை நிற பந்துகள் மட்டுமின்றி பிங்க் நிற பந்துகளிலும் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Tags:AKSTAMILMEDIA
Sports News
Post a Comment