இந்திய சினிமாவில் எந்த ஒரு மொழியானாலும் சிறந்த திரைக்கதையுடன் தரமான படம் அமையும் பட்சத்தில் ரசிகர்கள் மொழியை ஒரு பொருட்டாக கருதாமல் அந்த படத்தை கொண்டாடி வருவது கலைக்கு ஆரோக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் மொழிதாண்டி நடிகர்களும் இயக்குனர்களும் கூட்டணி வைத்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது கதையில் ஹீரோவின் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாத வகையில் தெளிவாக படத்தை நகர்த்திக் கொண்டு போவார். யாருக்காகவும் படத்தின் கதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பாத அவர் தனக்குரிய கதையை தனக்கே உரிய பாணியில் எடுப்பதில் வல்லவர்
நாளையஇயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் வெற்றியடைந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் பீட்சா, மகான், ஜிகர்தண்டா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். ஜிகர்தண்டா கமர்சியல் ஹிட் ஆனதை அடுத்து ஜிகர்தண்டா xx இயக்கி அதையும் தூள் கிளப்பி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். நடிகர்களுக்கு தகுந்தவாறு மாஸான கதையை ரெடி பண்ணி அவர்களை கொக்கி போட்டு தூக்குவதில் வல்லவரான கார்த்திக் சுப்புராஜா தற்போது தெலுங்கு நடிகர் ஒருவருக்கு வலைவீசி உள்ளார்.
வெப்பம், நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியப்பட்ட தெலுங்கின் முன்னணி நடிகர் நானி, தசராவின் வெற்றியை அடுத்து கேங்ஸ்டர் படம் பண்ண வேண்டும் என்று பல தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். கடந்த வருடம் 6 இயக்குனர்களை அணுகி இருந்த நிலையில் டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் கதை பிடித்து படம் ஏற்பாடான நிலையில், படத்தின் பட்ஜெட் அதிகம் என இந்த படத்தை கைவிட்டு விட்டார்கள்
சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான “ஹாய் நன்னா” படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வெளியிட்டு விழாவில் பேசிய நானி “சிறந்த கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் அது மக்களிடம் போய் சேரும்” என்பதை நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் “சிறந்ததமிழ் இயக்குனர், என்னுடைய நண்பர் எனக்காக கதை சொன்னார். விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்” என்று சஸ்பென்ஸ் உடன் முடித்து இருந்தார்.
அந்த நண்பர் யார் என்றால் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கேங்ஸ்டர் கதை நானிக்கு பிடித்துப் போக விரைவில் படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இங்கே தமிழ் சினிமாவில் நிறைய கேங்ஸ்டர்ஸ் இருக்கும் நிலையில் புதிதாக தெலுங்கில் இருந்தும் இறக்குமதி செய்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
Tags:AKSTAMILMEDIA
cinema news
Post a Comment