நெல்லூர் அருகே கரையைக் கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல்!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வரலாறு காணாத மழையைப் பெற்றுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கி இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன. சென்னைக்கு அருகே இருந்த மிக்ஜாம் புயல், இப்போது நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டிணம் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் சென்னையை கடந்து 190 கிமீ தொலைவில் இப்போது உள்ளதால் சென்னைக்கு மழை குறைந்துள்ளது. பல இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இப்போது மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சூழப்பட்டுள்ள பல பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial