சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்றால் அழகு ரொம்பவே முக்கியம் என்று சொல்லி வந்த நிலையில், திறமை இருந்தால் மட்டுமே போதும் என்று பல நடிகர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிரதீப் ரங்கநாதனும் சேர்ந்திருக்கிறார். இவர் லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்ததில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். முக்கியமாக பெண்கள் மனதை கவர்ந்து இழுத்து இருக்கிறார்.
அந்த வகையில் கோமாளி மற்றும் லவ் டுடே படத்தை இயக்கியதன் மூலம் தற்போது ஹீரோவாகவும் பயணத்தை தொடங்கி விட்டார். இவரை தேடி அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. அதனால் லவ் டுடே படத்திற்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகப் போகும் படத்தின் டைட்டில் LIC (Love Insurance Corporation) என்று வைத்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகியோர் தயாரிக்கப் போகிறார்கள். இதில் கீர்த்தி செட்டி, எஸ்ஜே சூர்யா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியிருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார்.
Post a Comment