பிரம்மாண்ட தயாரிப்பில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவரும் படங்கள், படங்களை வெற்றி பெற வைக்க விளம்பர மற்றும் வியாபார தந்திரங்கள் என படத்தின் பட்ஜெட்டும், வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்திய சினிமா வியாபார நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு போட்டி போட்டு முன்னேறி வருகிறது.
படத்தின் நாயகர்களுக்கு சில நூறு கோடிகளில் சம்பளம் கொடுக்கும் இந்திய சினிமா வசூலை ஆயிரம் கோடிகளில் எதிர்பார்ப்பது தவறில்லையே. இத்தகைய தந்திரங்கள் பாலிவுட்டில் மட்டுமே நிகழ்ந்திருந்த நிலையில் இப்போது கோலிவுட்டிலும் தலை தூக்கி உள்ளது. ஆயிரம் கோடியை எட்டி விடும் நோக்கில் தயாரிக்கப்படும் தமிழ் சினிமாக்கள் மற்றும் வசூலை எட்ட போராடும் இயக்குனர்கள் இதோ
விக்ரம், மாளவிகா மோகன்,பசுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் தங்கலான் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கோலார் தங்க வயலில் வேலை பார்த்த பழந்தமிழர்களின் கதையை தழுவிய படமாகும். நடிகர்களை கசக்கி பிழியும் இயக்குனர், கேரக்டர்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் நடிகர் என பல பிளஸ்களுடன் உருவாகும் தங்கலான் வியாபார நோக்கிலும் ஆயிரம் கோடியை தாண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Post a Comment