நெருப்பாய் கொதிக்கும் அவுஸ்திரேலியா

 



அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை நிலவி வருகிறது.

தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் காற்று , கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளில் தீ பரவும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தென் அவுஸ்திரேலியாவில் வெப்பநிலை 47 செல்சியசாக காணப்பபடுகின்றது. மாநிலத்தில் கட்டுப்படுத்தமுடியாத காட்டுதீ ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial