நத்தார் விருந்தில் உணவு உண்ட 700 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் அளித்த நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனத்தின் ஒரு பிரிவான பிரான்ஸ் நாட்டிலுள்ள கிளை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு விருந்தளிக்க நிறுவனத்தினர் முடிவு செய்திருந்தனர்..
இந்தநிலையில் சுமார் 2600 ஊழியர்கள் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
மேற்கு பிரான்ஸ் பகுதியில் லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளும் வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 700 ஊழியர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதுடன் சேர்த்து தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி இந்த விருந்தில் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விமான தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது,
"நாங்கள் விருந்து வழங்கிய அனைத்து உணவு மாதிரியையும் வைத்துள்ளோம். சுகாதார துறையுடன் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்" என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment