சினிமாவிற்குள் நுழைந்த எத்தனையோ பிரபலங்கள் நடிப்பிலும் சரி அவர்களுடைய படைப்புகளையும் வியந்து பார்க்கும் அளவிற்கு சாதித்து காட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் கமல்ஹாசனும் சினிமாவில் கற்றுத் தெரிந்த ஞானியாகவும், என்சைக்ளோபீடியா என்று சொல்லும் அளவிற்கு நடமாடும் புத்தகமாகவும் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்.
முக்கியமாக இவர் எந்த மொழிகளில் நடித்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி திறமையை காட்ட வேண்டும் என்று பல மொழிகளை கற்றிருக்கிறார். அந்த வகையில் எந்த படங்கள் ரீமேக் செய்தாலும் அதற்கேற்ற மாதிரி டப்பிங் கொடுத்து பேசும் அளவிற்கு தகுதியை வளர்த்து இருக்கிறார்.
அத்துடன் நடிப்பையும் தாண்டி சாதனையாளராக வளர வேண்டும் என்று தன்னை தானே செதுக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட இவரை போல இன்னும் இரண்டு நடிகர்கள் பல மொழிகளை கற்றுக் கொண்டு டப்பிங் பேசி இருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களுக்கும் வாய்ஸ் கொடுத்து பேசி இருப்பது ஹைலைட்டாக இருக்கும்.
அப்படிப்பட்ட அவர்கள் பல படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் பிரித்விராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ். முக்கால்வாசி இவர்கள் பான் இந்தியா படங்களுக்கு டப்பிங் பண்ணி கொடுப்பார்கள். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது ஒரு மொழியை கற்றுக்கவே குதிரைக்கொம்பாக இருக்கும் பட்சத்தில் மற்ற மொழி படங்களிலும் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என்று ஒரிஜினலாக வாய்ஸ் கொடுப்பது பெரிய விஷயம் தான்.
எப்போதுமே திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல இவர்களிடம் இருக்கும் திறமை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போய் சேர்க்கும். அதனால்தான் இந்த இரண்டு ஹீரோக்களுமே பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
Post a Comment