270 படங்களுக்கும் மேல் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.




நடிகர் போண்டா மணி சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் பாக்யராஜ் படமான பவுனு பவுனுதான் என்கிற படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமானார். அதன் பின் ரஜினியின் முத்து படத்தில் ஒரு சில காட்சிகளில் தலை காட்டிருப்பார். இப்படி ஒரு சில கேரக்டரில் நடித்து வைத்த இவர் விவேக் உடன் சேர்ந்து நடித்த காட்சிகள் மூலம் இவருக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார்.


அதன் பின் வடிவேலுடன் இணைந்து வின்னர், வசீகரா, சச்சின், சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற படங்களில் காமெடியில் கலக்கி வந்தார். முக்கியமாக இவரை ஒரு விஷயத்தில் நாம் மறக்கவே முடியாது. அதாவது கண்ணும் கண்ணும் என்ற படத்தில் வடிவேலுடன் சேர்ந்து லூட்டி அடித்து இருப்பார். அதிலும் போலீஸ் வந்து அடிச்சு கேட்டாலும் சொல்லாதீங்க என்று , வடிவேலுவை போலீஸ் இடம் மாட்டிவிட்டு மறைந்து விடுவார்.

இப்படி தொடர்ந்து கிட்டத்தட்ட 270 படங்களுக்கு மேல் நடித்து வந்த ரசிகர்கள் மனதில் இவருக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட இவர் கொரோனா காலத்தில் சிறுநீரகப் பிரச்சினையால் ரொம்பவே அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சூழலில் தனுஷ், விஜய் சேதுபதி, வடிவேலு, பார்த்திபன், மயில்சாமி போன்ற பலரும் இவருக்கு உதவிகளை செய்து வந்திருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial