டெல்லி : 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக ஒன்றிய அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. பிற நாடுகளிடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.