சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இது தொட்டதெல்லாம் துலங்கும் காலம் போல் தெரிகிறது. அண்ணாத்தே படத்திற்கு பிறகு கொஞ்சம் டல் அடித்த சூப்பர் ஸ்டார், கரெக்டாக நெல்சனின் கதையை லாக் பண்ணி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பார்த்து வந்த லோகேஷ் கனகராஜுக்கு லியோ படம் சற்று சருக்களை கொடுத்து இருக்கிறது. இதனால் தலைவர் 171 படத்தை ரொம்பவும் கவனமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ். லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு மல்டி ஸ்டார் கூட்டணி தான் இதுவரை பக்கபலமாக இருந்து வந்தது. அதே மல்டி ஸ்டார் கூட்டணி இப்போது நெகட்டிவ் ஆக மாறி இருக்கிறது.
Post a Comment