பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது...
நீங்க செய்ய வேண்டியது..
எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால் சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...!
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...
அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!"
காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!