நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment