மர்மமான முறையில் காணமல் போன நபர் சடலமாக மீட்பு

 


சம்பூர் தொடுவான் குளப்பிரதேசத்தில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த தனது தாயைப் பார்ப்பதற்காகச் சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த இளம் தம்பதியில் கணவன் காணாமல் போன சம்பவம் இன்று மதியம் நடைபெற்றிருந்தது. குளத்துக்கட்டுப்பகுதியில் தனது மருமகன் அலறும் சத்தம் கேட்டு தான் வந்து பார்த்த போது மருமகனைக் காணவில்லை என மாமி தெரிவித்திருந்தார். எனினும் தனது கணவனை முதலை இழுத்துச் சென்றதை தான் கண்டதாக அவரது மனைவி தெரிவித்திருந்தார். இந்தச்சம்பவத்தின் போது 




கதிர்காமத்தம்பி நிதுர்சன் வயது 20 என்கின்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறவினர்கள் மற்றும் கிராம வாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்..சம்பவம் தொடர்பில் சம்பூர் போலீசார் மற்றும் கடற்படையின் அவசர மீட்புக்குழுவினர் போன்றோரின் உதவி கோரப்பட்டிருந்த போதிலும் அவ்வுதவிகள் எவையும் கிடைப்பதற்கு முன்னரே அவரது உறவினர்கள் குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட இடத்துக்கு எதிர்ப்பக்கமாக கரையை அண்டிய இடத்திலிருந்து சடலமாக மீட்டனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்பூர் போலீசார் சடலத்தை மூதூர் தள வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial