மொத்த நம்பிக்கையும் இழந்ததால் வெறுத்துப்போன சூப்பர் ஸ்டார்

 



பொதுவாக சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்கும் குருவாக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி. இவருடைய ஸ்டைல், நடிப்பு பார்த்து தான் பலருக்கும் நடிக்கணும் என்ற ஆசையை ஏற்பட்டிருக்கும். அந்த அளவிற்கு எல்லோருடைய மனதிலும் நிலைத்து தனி ஒருவராக இருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய மானசீக சிஷ்யனாக லாரன்ஸ் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

இவரைப் பற்றி பேசாத மேடைகள் இல்லை, சொல்லாத புகழாரம் இல்லை. அப்படிப்பட்ட இவருக்கு எப்படியாவது ரஜினியுடன் ஒரு படத்திலேயே நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனாலயே கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ரஜினி இடம் இவருடைய ஆசையை தொடர்ந்து சொல்லி வந்தார்.

ஆனால் நேரம் காலம் கூடி வரும் பொழுது எல்லாமே தானாக அமையும் என்று ரஜினி சொல்லி இருந்தார். அந்த வகையில் அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது என்று கூறி ரஜினி நடிக்கப் போகும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு லாரன்ஸை கூப்பிட்டு இருக்கிறார். அவரும் கிடைத்த சான்சை மிஸ் பண்ணிட கூடாது என்று உடனே ஒத்துக் கொண்டார்.


ஆனால் இங்குதான் லாரன்ஸ் கொஞ்சம் ரஜினியை சீண்டி இருக்கிறார். அதாவது ரஜினி பட தயாரிப்பாளர் இடம் நேரடியாக லாரன்ஸ் சென்று அவருக்கான சம்பளத்தை இவ்வளவு வேண்டுமென்று டிமாண்ட் பண்ணி கேட்டிருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரஜினி மிகவும் ஷாக் ஆகி இருக்கிறார்.

அதற்கு காரணம் என்னை பார்த்து வளர்ந்த பையன், என்னுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட காரணத்தையும் தாண்டி சம்பளம் தான் பெருசாக இருக்கிறதா என்று கோபப்பட்டு இருக்கிறார். அத்துடன் லாரன்ஸ் மீது இருந்த நம்பிக்கை தற்போது இல்லாததால் படத்தில் அவருக்கு கொடுக்க இருந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார்.

இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பது போல. எத்தனையோ நடிகர்கள் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று தவம் இருக்கும் போது தானாக தேடி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ரஜினியிடமே வாலாட்டி இருக்கிறார். அதனால் உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா என்பதற்கு இப்ப தற்போது லாரன்ஸ் நிலைமை ஆகிவிட்டது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial