ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் தமன்னா

 



கடந்த மூன்று வருட காலமாக தமிழ் சினிமாவில் தமன்னாவிற்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதனால் அக்கட தேசத்திற்கு போய்விட்டார். 

அங்கேயும் பெருசாக சொல்லும்படி இவருக்கு எந்த படமும் ஹிட் ஆகவில்லை. அதனால் வெப் சீரியஸ் தொடரில் நடிக்க ஆரம்பித்து இவர் பெயரை டேமேஜ் பண்ணும் அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் தான் இவருக்கு தமிழில் ரஜினி மூலம் கிடைத்த வாய்ப்பு ஜெயிலர் படத்தில் காவாலா சாங். இந்த ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இவருடைய புகழ் பரவி விட்டது. எல்லா பக்கமும் இந்த பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படிப்பட்ட இந்த பாடலில் இவர் ஆடியதற்கு வாங்கிய சம்பளம் 3 கோடி.

இதன் மூலமாக தற்போது இவர் தினந்தோறும் 1கோடி சம்பாதித்து வருகிறார். அதாவது ரொம்பவே ஹிட் ஆனதால் நார்த் இந்தியா பக்கம் நடக்கும் பெரிய பெரிய திருமண நிகழ்ச்சிக்கு தமன்னாவை ஆடுவதற்கு கூப்பிடுகிறார்களாம். அதுவும் இவர் ஆடுகிறார் என்றால் இவருக்காக சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடியும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

அந்த வகையில் வாரத்துக்கு 5 கோடி சம்பாதிக்கும் அளவிற்கு தற்போது இவருக்கு அதிர்ஷ்டம் கைகூடி வந்திருக்கிறது. சினிமாவில் நடிச்சா கூட இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமானு தெரியவில்லை. ஏனென்றால் அதைவிட அதிக சம்பளம் கிடைப்பதால் தற்போது இவருடைய முழு கவனமும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் மட்டுமே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது தமன்னா ரொம்பவே பிஸியாக சுற்றிக்கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஜெயிலர் படத்தில் படு தூக்கலாக ஆடியது தான். கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொடுக்கும் என்று சொல்வார்கள் அது போல தற்போது தமன்னாவிற்கு நாலா பக்கமும் இருந்து பணம் கொட்டுகிறது.

இதனால் தற்போது தமன்னா தினமும் பண மழையில் நனைந்து கோடியில் புரண்டு கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் கமிட் ஆகி அதிலும் நடித்துக் வருகிறார். இப்படி ஒத்த பாடல் மூலம் மொத்தமாக இவருக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial