பெரிய வசூல் நாயகனா மாறனும்- பிரபல இயக்குனர்

 




பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்குடிமகன்.


சேரன் மற்றும் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் கீழ் சாதியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த கதையம்சம் கொண்டதாக தகவல் வெளியானது.

சேரனின்  நடிப்பில் உருவான இப்பட கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படம் பற்றி சுந்தர் என்பவர் தன் வலைதள பக்கத்தில் ‘’#குலத்தொழில்எதிர்
ப்பு பை வெளிப்படையாக உரையாடி இருக்கிறது இக்கதைக்களம்.

 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் பெரும் அவலம் இதனை அறவே ஒழித்தாகவேண்டும்.சின்னசாமியை போல் அனைவரும் இதில் உறுதியாக இருக்கவேண்டும்.
#தமிழ்க்குடிமகன் வெல்வான்.’’என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு’ வினோத்குமார் என்ற நபர், இந்த திரைப்படத்தை தியேட்டர்ல பார்க்க முடியலன்னு வருத்தம் எனக்கு இருக்கு பெரிய படங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை நல்ல திரைப்படத்துக்கு எல்லாரும் கொடுக்கணும் பெரிய திரைப்படத்தை  அதிக தியேட்டரில் ரிலீஸ் பண்றாங்க அது இந்த தமிழ் சினிமாவில் மாற வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு இயக்குனர் சேரன், 

’’ஹாஹா... அதுக்கு நம்ம பெரிய வசூல் நாயகனா மாறனும்...  இங்கே கதைநாயகனுக்கேல்லம் கல்லாகட்டும் கூட்டம் வராது தம்பி... சிந்தனை சென்று சேர்கிறதா என பார்ப்போம்... காரில் போனால் என்ன பைக்ல போனா என்ன... போகும் இடம்தான் முக்கியம்.’’..என்று பதிவிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial