சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அடிக்கடி வம்பிழுக்கும்படியாக பதிவு போட்டு வருகிறார். ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்பே பல நெகட்டிவ் விமர்சனங்களை போட்டு வந்த நிலையில் எல்லாம் தவுடுப்பொடியாக்கி இப்படம் வசூலை வாரி குவித்திருந்தது.
ஆனால் இப்போது வரை ஓயாத ப்ளூ சட்டை தொடர்ந்து இதே வேலையை செய்து வருகிறார்.
அதுவும் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்து விடும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இப்போது லியோ படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆனாலும் லியோ படத்தின் சாதனையை ஜெயிலர் படைத்தால் முறியடிக்க முடியவில்லை என்று ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார்.
அதாவது ஜெயிலர் மற்றும் லியோ என இரண்டு படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்திருந்தார். ஆனாலும் ரசிகர்களை பொறுத்தவரையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற அளவுக்கு லியோ படத்தின் பாடல்கள் இல்லை என்ற விமர்சனம் தான் வருகிறது. ஆனால் யூடியூப் வீஸ்ஸை வைத்து ஒரு பதிவை ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் போட்டிருக்கிறார்.
Post a Comment