ஹர்திக் பாண்டியா குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இன்னும் 2 போட்டிக்கு கிடையாது என உறுதி

 ஹர்திக் பாண்டியா குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இன்னும் 2 போட்டிக்கு கிடையாது என உறுதி

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.






உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று பிரிவிலுமே அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பில்டிங் செய்து கொண்டிருந்த போது ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார். இதனை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் ஹர்திக் பாண்டியாவிற்கு தசை சிறிய அளவில் கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்த நிலையில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் கடைசி லீக் ஆட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

 நெதர்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பங்கு பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதில் அவர் விளையாடவில்லை என்றால் நேரடியாக முதல் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடக் கூடும் என பிசிசிஐ தரப்பு தெரிவித்து இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருவதாகவும் அவருடைய உடல் தகுதியை மருத்துவக் குழுவினர் கூர்ந்து கவனித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு நாட்களில் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி குறித்து ஒரு நல்ல முடிவு வரும் என்றும் பி சி சி ஐ கூறியுள்ளது. ஹர்திக் பாண்டியா தற்போது உடல் காயத்திலிருந்து மெல்ல மீண்டும் வருகிறார் என்று மருத்துவர்களும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவின் காயம் குணமடைந்து வருவதாகவும் அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial